உடலுறவின் போது மாரடைப்பு... இறப்பால் காதலி அதிர்ச்சி!

Facebook India Madhya Pradesh
By Sumathi Jul 06, 2022 05:17 AM GMT
Report

 உடலுறவின் போது காதலன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.

 பேஸ்புக் பழக்கம்

நாக்பூரை சேர்ந்த அஜய் பார்டெகி என்பவர் வெல்டிங் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு(28). இவரும் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் செவிலியராக பனி புரிந்து வரும் பெண்ணும் (23) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

cardiac arrest

இருவரும் பேஸ்புக்கில் சந்தித்துள்ளனர். இது பற்றி அவர்களின் குடும்பத்துக்கு தெரியவந்ததை அடுத்து. இருவரும் திருமணம் செய்ய இருந்தனர். இந்நிலையில், பார்டெகிவும், அவரது காதலியும் லாட்ஜிற்குச் சென்று,

சந்திப்பு

 உடல் உறவுவில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பார்டெகி சரிந்து விழுந்துள்ளார். உடனே பதறி போன பெண், லாட்ஜ் நிர்வாகத்தை அணுகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சயோனர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

nagpur

இதைத்தொடர்ந்து, பார்டேகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பார்டேகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சயோனர் காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் சதீஷ் பாட்டீல் கூறுகையில்,

பிரதே பரிசோதனை

இருவரும் நெருக்கமாக இருந்தபோது பார்டெகி மயங்கி விழுந்ததாக அந்த பெண் கூறினார். உயிரிழந்தவர் எந்த மருந்தையும் உட்கொண்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

போதைப் பொருள் பொட்டலங்கள் என எந்த விதமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த பெண் முன்னிலையிலும் அவர் எந்த மருந்தையும் சாப்பிடவில்லை என கூறினார்.

பிரதே பரிசோதனையில், மாரடைப்பே மரணத்திற்கு முதன்மையான காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் ஆனந்த் சஞ்சேதி கூறுகையில், உடல் உறவின் போது மாரடைப்பு வருவது அரிதானது.

மாரடைப்பு

ஆனால் சாத்தியம் இருக்கு. தற்காலத்தில், கண்டறியப்படாத இருதய நோய், 20 வயத்துக்குட்பட்ட இளைஞர்களுக்கு கூட ஆபத்தானது. இதனை கரோனரி தமனி என்று கூறுவார்கள்.

இந்த நோய்யின் தாக்கம் என்னவென்றால் இதயத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை வழங்கும் இரத்தக் நாளங்கள் குறுகிய நிலையில் இருக்கும். கரோனரி தமனி என்கிற கண்டறியப்படாத இருதய நோய் இருந்தால்,

அவர்கள் உடலுறவு போன்ற செயலில் ஈடுபடும் போது அது உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம் என தெரிவித்தார். கடுமையான செயல்பாடுகளின் போது இதய தசைகளுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் தேவை அதிகமாக இருப்பதாகவும்,

இதனை சரியாக பார்க்காவிட்டால் மரணத்தை விளைவிக்கும் என்றும் சஞ்சேதி விளக்கினார். கரோனரி தமனி நோய் இருந்தால். பாலியல் செயல்பாடுகளின் போது இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இது மரணத்திற்கு வழிவகுக்கும்," என்று அவர் கூறினார், கடந்த காலத்தை விட இப்போது மக்கள் தங்கள் இதயத்தை அதிக அக்கறை கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.  

பயிற்சி வகுப்பில் பழக்கம்.. 19வயது இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!