காதலனின் கட்டாயத்தால் யூடியூப்பை பார்த்து தானே கருக்கலைப்பு செய்த இளம்பெண் - வெளியான அதிர்ச்சி தகவல்
நாக்பூரில் காதலனின் கட்டாயத்தால் இளம் பெண் ஒருவர் யூடியூப்பை பார்த்து தனக்கு தானே கருக்கலைப்பு செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மஹாராஸ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை சுகைல் வஹாப் கான் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு முறை திருமணமான இவர் முதலாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறான்.
இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணிடம் எல்லை மீறியுள்ளான்.
இதனால் கர்ப்பம் அடைந்த அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளான். இதனையடுத்து அவனிடம் அந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்ள மண்றாடியுள்ளார்.
இதையடுத்து அவன் கருகலைப்பு செய்து கொண்டால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளான். மேலும் யாருக்கும் தெரியாமல் யூடியூப்பை பார்த்து கருகலைப்பு செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளான்.
அவனின் பேச்சுக்கு கட்டுப்பட்ட அந்த இளம் பெண் வீட்டில் அனைவரும் மும்பைக்கு சென்ற நிலையில் தனியாக இருந்த அந்த பெண் வேறு வழியில்லாமல் தன் உயிரை பனையம் வைத்து யூடியூப்பை பார்த்து வீட்டில் உள்ள பொருட்களை பார்த்து 7 மாத கருவை கலைத்திருக்கிறார்.
பின்னர் சுகைல் கருவை எடுத்துச்சென்று இடுகாட்டில் புதைத்ததாக கூறப்படுகிறது.இந்த சம்வம் நடந்து சில வாரங்கள் கடந்த நிலையில் மும்பையில் இருந்து திரும்பிய பெற்றோருக்கு இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியடைந்து அவர்கள் சுகைல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சுகைல் வஹாப் கானை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.