ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - இந்தியர்கள் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
இந்திய பதிவெண் கொண்ட பேருந்து பொக்காராவில் இருந்து 40 பயணிகளுடன் நேப்பாள தலைநகர் காத்மாண்டுவுக்குப் புறப்பட்டது.
திடீரென மர்ஸ்யங்கடி பகுதியில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, மர்சங்கடி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. அதில், பலர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
27 பேர் பலி
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
16 பேர் உயிருடன் மீட்கப்பட்டு விமானம் மூலம் காத்மாண்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 10 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளம் வந்திருக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மகாராஷ்டிரா மாநிலம் பாக்மதி மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.