85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட 24 வயது பெண் - வைரலாகும் ஜோடி!
24 வயது பெண், 85 வயது நபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
அமெரிக்கா, மிசிசிப்பி மாகாணத்தை சேர்ந்தவர் மிராக்கிள் போக். இவர் 2019ல் ரியல் எஸ்டேட் ஏஜென்டாக இருக்கும் சார்லஸ் என்பவரை சந்தித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சார்லஸ் மீது மிராக்கிளுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின், 61 வயது முதியவரான சார்லஸை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். ஆனால், இருவரது திருமணத்திற்கு மிராக்கிளின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செயற்கை கருத்தரித்தல்
இதனை மீறி இருவரும் 2020ல் திருமணம் செய்துக்கொண்டனர்.
தற்போது இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகியுள்ளனர். அதன்படி, செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்து, குழந்தையை பெற தயாராகியுள்ளார்.
சார்லஸிற்கு, மிராக்கிளின் தாத்தாவை விடவும் 10 வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த காதல் தம்பதி குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.