மேக வெடிப்பு.. திடீரென பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்!

Indian Army
By Vinothini Oct 04, 2023 07:29 AM GMT
Report

கனமழை காரணமாக பெருக்கெடுத்த திடீர் வெள்ளத்தில் சிக்கிய ராணுவ வீரர்கள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளம்

சிக்கிம் மாநிலம், வடக்குப்பகுதியில் உள்ள ஹோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் லாச்சென் சமவெளியில் பாயும் தீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

23-militant-missed-heavy-flood-in-sikkim

மேலும், சுங்க்தாங் என்ற நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் இந்த வெள்ளத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் திடீரென 20 அடி உயரத்துக்கு கரைபுரண்டோடிய ஆற்று வெள்ளத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை.. பிறந்த 16 குழந்தைகள், 15 நோயாளிகள் உயிரிழப்பு - சோகம்!

அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை.. பிறந்த 16 குழந்தைகள், 15 நோயாளிகள் உயிரிழப்பு - சோகம்!

ராணுவ வீரார்கள் மாயம்

இந்நிலையில், தீஸ்டா நதியின் அருகே பர்தாங்க் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அதில் இருந்த 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர்,

இது குறித்து குவாஹாட்டி ராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.