கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

By Thahir Aug 04, 2022 03:13 AM GMT
Report

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை 

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை | Holidays For Schools And College Due To Heavy Rain

நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

அந்த வகையில், கொடைக்கானலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை | Holidays For Schools And College Due To Heavy Rain

கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. அதே போல் மழை தொடர்வதால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.