அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை.. பிறந்த 16 குழந்தைகள், 15 நோயாளிகள் உயிரிழப்பு - சோகம்!
மருந்து பற்றாக்குறையால் 16 குழந்தைகள், 31 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனை
மகாராஷ்ர மாநிலம், தானே மாவட்டம் நான்டெட் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி மாநகராட்சியில் அந்த சுற்றுவட்டாரத்திற்கு ஒரு அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் 16 பேர் குழந்தைகள். இந்த உயிரிழப்புக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அந்த மருத்துவமனை டீன் கூறுகையில், "மருத்துவமனையில் பிறந்த 6 பச்சிளம் ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகள் இறந்தன. பல்வேறு நோய்களுக்கு ஆளான 12 பெரியவர்களும் இறந்துள்ளனர். அதில் அதிகமானோர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
மருத்துவமனையில் நிலவும் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம். பல்வேறு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் நாங்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
நிர்வாகம் பதில்
இந்நிலையில், நான்டெட் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வயது வந்தவர்களில் 12 பேர் உயிரிந்துள்ளனர். அவர்களில் 5 பேர் ஆண்கள். 7 பேர் பெண்கள். இவர்களில் 4 பேர் இதயம் சார்ந்த பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்தனர்.
ஒருவர் விஷம் அருந்தியதாலும், ஒருவர் கல்லீரல் பிரச்சினை காரணமாகவும், இருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாகவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கலால் உயிரிழந்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.