நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் - பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!
நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
2025 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
தேதி
ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று விடுமுறை விடப்படும். அதன் பிறகு மார்ச் 10ஆம் தேதி 2வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவடையும்.
மொத்தம் 27 அமர்வுகளாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. கடைசியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரையுடன் கூட்டத் தொடர் முடிவடையும்.