அப்பன் பேச்சை பேசுவது எல்லாம் நல்லதல்ல - உதயநிதிக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை..!
உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சரின் அப்பன் வீடு சொத்தையா கேட்டேன் என கூறியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
நிர்மலா செய்தியாளர்கள் சந்திப்பு
பெரும் பாதிப்புகளை சந்தித்த தென்தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் மீட்புப்பணிகளை குறித்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக அரசு மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். 92% பணிகள் முடிந்து விட்டதாக முன்னர் கூறிவிட்டு தற்போது 42% தான் செலவழித்தோம் என மாற்றி பேசுகிறார் அமைச்சர் என விமர்சித்த அவர், ன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை மையம் மீது குற்றம் சாட்டுவது ஏன் என விமர்சித்தார்.
இன்ச் பை இன்ச்சாக இவ்வளவு மழை வரும் என்பதை கணித்துக் கூற முடியாது என்று விளக்கமளித்த அவர், மாநில அரசிடம் இருந்து கோரிக்கை வைக்கப்படுவதற்கு முன்பாகவே மீட்புப் பணிக்கான அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன என்றார்.
உதயநிதிக்கு அறிவுரை
மேலும், வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது என்று தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆனால், தென்மாவட்ட பொறுப்பு தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றனர்? என்று வினவினார்.
தொடர்ந்து பேசிய அவர், உதயநிதியின் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்ற அவர், சனாதன தர்மத்தின் போதும் அதை அழிக்க வரவில்லை.. ஒழிக்கவே வந்து இருக்கிறோம் என்று பேசினார் உதயநிதி அல்லவா.. என்று சாடினார். அவுங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுகிறவர்கள் என்று உதயநிதியின் பேச்சை குறிப்பிட்டு பேசிய நிர்மலா சீதாராமன்,
அவுங்க அப்பன் வீட்டு சோத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா, அப்படின்னு கேட்க முடியுமா? என்று வினவி அவுங்க தாத்தா எப்பேர்பட்ட தமிழ் அறிஞர் என்றும் அதனால், பதவிக்கு ஏற்ற மாதிரி பேச வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
நிர்மலா சீதாராமனின் முழு செய்தியாளர் சந்திப்பை கீழே உள்ள வீடியோவில் காணலாம்...