மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Smt Nirmala Sitharaman Delhi
By Sumathi Dec 26, 2022 08:20 AM GMT
Report

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(63) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! | Finance Minister Nirmala Sitharaman Admitted Aiims

மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னும் மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான நேற்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் நிதியமைச்சர் சீதாராமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.