உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: 4வது முறையாக இடம்பிடித்த நிர்மலா சீதாராமன்!
சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. செல்வம், ஊடக பிரபலத்தன்மை, சமூகத்தில் தாக்கம், செல்வாக்கு ஆகிய நான்கும் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய அளவில் முதல் இடத்திலும் சர்வதேச அளவில் 36ஆவது இடத்திலும் உள்ளார். ஐரோப்பிய கமிஷனின் தலைவரான ஊர்சுலா வாண்டர் லியன் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
36வது இடம்
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட் இரண்டாவது இடத்தையும், அமெரிக்க துறை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்தாண்டு நிர்மலா சீதாராமனையும் சேர்த்து 6 இந்திய பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
நிர்மலா சீதாராமனை போலவே எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் 53 இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி 54 இடத்திலும் உள்ளனர்.