இனி அக்கவுண்டில் விழபோகும் ரூ.2000; ஒரே குஷிதான் - யாருக்கெல்லாம் தெரியுமா?
2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படவுள்ளது.
பிஎம் கிசான்
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
அதன்படி, இதுவரை 17 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 20,000 கோடி நிதி நாளை விடுவிக்கப்படும் நிலையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக விவசாயிகள் ekysஐ நிறைவு செய்திருக்க வேண்டியது கட்டாயம்.
பிஎம் கிசான் சம்மன் நிதியின் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பயனாளிகளின் தங்கள் நிலையை அறியலாம். பிஎம் கிசான் மொபைல் அப்ளிகேஷன் மூலமும் பயனாளிகள் விவரங்களை சரிபார்த்து கொள்ளமுடியும்.