Thursday, May 1, 2025

அரசு அலுவலகத்தில் சிக்கிய சூட்கேஸ் - கோடிக்கணக்கிலான பணம், நகை பதுக்கல்!

Rajasthan
By Vinothini 2 years ago
Report

அரசு தொழில்நுட்பத்துறை அலுவலகத்தில் அடித்தளத்தில் சிக்கிய சூட்கேஸில் இருந்து கோடிக்கணக்கிலான பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அலுவலகம்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

police-found-money-in-basement-of-govt-office

இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அலுவலக அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

அதனால் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள்.

சிக்கிய சூட்கேஸ்

இந்நிலையில், அங்கு அலமாரியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையினை திறந்து சோதனை மேற்கொண்டனர்.

police-found-money-in-basement-of-govt-office

அப்பொழுது அதில் கட்டுக்கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அந்த பணம் மற்றும் தங்ககட்டிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2.31 கோடி ரூபாய் பணம் 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தது.

தற்பொழுது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற உள்ளோம் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ள நிலையில் அதேநாளில் 2.31 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.