எகிறிய உள்நாட்டு விமானக் கட்டணம்; என்ன காரணம்? திணறும் பயணிகள்
உள்நாட்டு விமானக் கட்டணங்கள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடைகால பயணம்
இந்தியாவில் கோடைகால பயண சீசனில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் கணிசமான உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட 20% உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கோடை கால அட்டவணையில் உள்நாட்டுப் புறப்பாடுகளில் 6% அதிகரிப்புக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகப் பயணக் காலங்களில் பயணிகளின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கு விமான நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
விமானக் கட்டணம்
இதுகுறித்து பேசிய இந்திய டிராவல் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’வின் துணைத் தலைவர் ஜெய் பாட்டியா, "இந்தியாவில் இருந்து வணிக வகுப்பு விமானக் கட்டணங்களை அதிகம் பெறுவதை நாங்கள் காண்கிறோம். விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா ஆகியவை பாரிஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியாவுக்கு அதிக நேரடி சர்வதேச விமானங்களைச் சேர்ப்பதால்,
இந்தியாவில் இருந்து வெளிச்செல்லும் விமானக் கட்டணங்கள், கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரியாக உள்ளன" என்றுத் தெரிவித்துள்ளார். உள்நாட்டில், ஸ்ரீநகர் மற்றும் பாக்டோக்ரா போன்ற குளிர் பிரதேசங்கள் முன்னிலை விருப்பமாக இடம்பிடித்துள்ளன.
உள்நாட்டில் கோடை விடுமுறையை உற்சாகத்துடன் கழிக்க விரும்புவோருக்கு, இந்த கட்டண உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விமானக் கட்டணங்கள் எந்த மாற்றமும் இன்றி கடந்த ஆண்டைப் போலவே தொடர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.