ரூ.150 இருந்தா போதும்.. விமானத்தில் பயணம் செய்யலாம் - மிஸ் பண்ணிராதீங்க!

Uttar Pradesh Assam Flight
By Sumathi Apr 16, 2024 04:04 AM GMT
Report

ரூ.150க்கு பயணிக்கும் விமான பயணம் குறித்து தெரியுமா?

உடான் திட்டம்

தேஜ்பூரில் இருந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள லிலாபரி விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு நாளும் 2 விமானங்கள் பயணிக்கிறது.

ரூ.150 இருந்தா போதும்.. விமானத்தில் பயணம் செய்யலாம் - மிஸ் பண்ணிராதீங்க! | Flight Ticket 150Rs Scheme Details Here

தேஸ்பூரிலிருந்து லிலாபரிக்கு பேருந்தில் சென்றால், அதன் தூரம் சுமார் 216 கிமீ ஆகும். அதற்கு 4 மணி நேரம் ஆகும். அதே வழியில் கொல்கத்தா வழியாக செல்ல பிளைட்டின் கட்டணம் சுமார் ரூ.450.

ஆன்லைன் ஆர்டர் உணவுகள்,பொருட்களை பெற 200 மைல்கள் விமானத்தில் பறக்கும் பெண் - ஏன் தெரியுமா?

ஆன்லைன் ஆர்டர் உணவுகள்,பொருட்களை பெற 200 மைல்கள் விமானத்தில் பறக்கும் பெண் - ஏன் தெரியுமா?

 

விமான பயணம்

இந்நிலையில், மத்திய அரசு நடத்தும் ‘உடான் திட்டத்தின்’ கீழ், 150 ரூபாய்க்கு பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கிறது. மேலும், விமான நிறுவனங்களுக்கு வைபிலிட்டி கேப் ஃபண்டிங் (விஜிஎஃப்) அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

ரூ.150 இருந்தா போதும்.. விமானத்தில் பயணம் செய்யலாம் - மிஸ் பண்ணிராதீங்க! | Flight Ticket 150Rs Scheme Details Here

2017ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இம்பாலில் இருந்து ஷில்லாங்கிற்கு நேரடி விமானம் கிடைக்கும். குவஹாத்தி மற்றும் ஷில்லாங்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களுக்கு அடிப்படை டிக்கெட் விலை ரூ.400. இம்பால்-ஐஸ்வால், திமாபூர்-ஷில்லாங் மற்றும் ஷில்லாங்-லிலாபரி விமானங்களுக்கு விமான கட்டணம் ரூ.500.

பெங்களூரு-சேலம் விமானத்தில் அடிப்படை டிக்கெட் விலை ரூ.525. குவஹாத்தி-பாசிகாட் விமானத்திற்கான அடிப்படை விமானக் கட்டணம் ரூ. 99 என்றும், லிலாபரி-குவஹாத்தி வழிக்கு ரூ.954 என்றும் பகுப்பாய்வு காட்டுகிறது.