சாராய விற்பனை; தட்டிக்கேட்ட 2 மாணவர்கள் படுகொலை - பரபரப்பு!
சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாராய விற்பனை
மயிலாடுதுறை, முட்டம் கிராமத்தில் சாராய விற்பனை நடந்து வந்துள்ளது. ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவர் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனை தட்டிக் கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டவும் செய்துள்ளனர். இதில் போலீஸார் சோதனை மேற்கொண்டதில் ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஜாமீனில் வெளி வந்த ராஜ்குமார் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார்.
இளைஞர்கள் கொலை
இதனை அப்பகுதி 17 வயது சிறுவன் ஒருவன் தட்டிக்கேட்டுள்ளான். அவனை கடுமையாக தாக்கியுள்ளார். எனவே, ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் சேர்ந்து ராஜ்குமாரை இதுகுறித்து கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தன் மூவரும் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார், உடலை மீட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.