செல்போனை தர மறுத்த மனைவி - கத்தியால் கண்களை பிடுங்கி எறிந்த கணவன்
செல்போனை மனைவி தர மறுத்த ஆத்திரத்தில் கணவர் அவரது கண்களை பிடிங்கி எறிந்துள்ளார்.
மனைவியுடன் வாக்குவாதம்
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம், போஹ்ரி பகுதியை சேர்ந்தவர் சோட்டு கான். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஹனாஸ் கான்(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆரம்பம் முதலே மனைவி கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகம் கொண்டு அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று(12.02.2024) தனது மனைவியிடம் செல்போனை தருமாறு வாக்குவாதம் சோட்டு கான் வாக்குவாதம் செய்துள்ளார்.
கத்திக்குத்து
அவர் செல்போனை தர மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த சோட்டு கான், கத்தியால் மனைவியின் இரு கண்களையும் குத்தி வெளியே எடுத்துள்ளார். மேலும் அவரது பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி துன்புறுத்தியுள்ளார்.
வலி தாங்காமல் அவரது மனைவி அலறிய நிலையில், சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, இரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள அவரது கணவர் சோட்டு கானை தீவிரமாக தேடி வருகின்றனர்.