2வயது மகளை மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்த தாய் - விசாரணையில் பகீர் தகவல்!
2வயது மகளை மாடியிலிருந்து கீழே வீசி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 வயது மகள்
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் முர்ஷித் வயது 29 . இவரது மனைவி அனம் . இந்த தம்பதிக்கு 2 வயத்தில் மகள் உள்ளார். முர்ஷித்தின் மனைவி அனம் தொலைப்பேசியில் அடிக்கடி இன்னொரு நபருடன் பேசியதாகத் தெரிகிறது.
இதனை அறிந்த முர்ஷித் மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி 2வயது மகள் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.
ஆனால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கடந்த 26 ஆம் தேதி குடியிருப்பிலிருந்த சிசிடிவி காட்சிகளை அவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் 2வயது மகளை மாடியிலிருந்து கீழே வீசி தாய் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தாய் கொலை
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து முர்ஷித் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மனைவி அனத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனம் வேறோரு ஆணுடன் தகாத தொடர்பிலிருந்து வந்துள்ளது.
வீட்டிற்கு வரும் நபர்கள் குறித்து இரண்டரை வயதுக் குழந்தை அவரது தந்தையிடம் பலமுறை கூறியுள்ளது. இதற்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை செய்யத் திட்டமிட்டு மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.