ஆர்டர் செய்து 2 ஆண்டுகளுக்குப் பின் டெலிவரியான புராடக்ட்... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்!

Viral Photos Online business
By Vidhya Senthil Sep 05, 2024 09:00 AM GMT
Report

 2 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்த ஆர்டரிலிருந்து பிரஷர் குக்கரைப் பெற்ற நபர் ஆச்சரியமடைந்துள்ளார்.

ஆன்லைன் டெலிவரி

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் டெலிவரி என்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.இதற்குக் காரணம் அதில் வழங்கப்படும் சலுகைகள் தான். இவை மக்களை அதிக அளவில் கவர்ந்து ஈர்க்கிறது.

online order

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்த ஆர்டரிலிருந்து பிரஷர் குக்கரைப் பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ஜெய் என்ற யூசர் தனது X-தள பதிவில் சுவாரஸ்யத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் மதம் 1 ஆம் தேதி அன்று அமேசானிலிருந்து பிரஷர் குக்கர் ஆர்டர் செய்தேன் . பின்பு அந்த ஆர்டரை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற்றேன்.

அடடா... இப்படி ஒரு கண்டுபிடிப்பா? ஆச்சர்யமூட்டும் வீடியோ!

அடடா... இப்படி ஒரு கண்டுபிடிப்பா? ஆச்சர்யமூட்டும் வீடியோ!

 X-தள பதிவு

ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 28, 2024 அன்று ரத்து செய்யப்பட்ட பிரஷர் குக்கர் வீட்டு வாசலுக்கு வந்தது.இதனை சந்தோசமாகப் பெற்று கொண்டேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆர்டர் செய்து 2 ஆண்டுகளுக்குப் பின் டெலிவரியான புராடக்ட்... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்! | 2 Years After Canceling Amazon Order Man Receives

தற்பொழுது அவரது பதிவு இணையதளத்தில் விரைவாகி வருகிறது. மேலும் இந்த பதிவிற்கு நெட்டிசன் பலரும் கமெண்ட்களை அள்ளிதெறித்து வருகின்றனர்