வீசிய வலையில் சிக்கிய தங்க மீன்கள்... ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்
மும்பை, மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் டாரே. இவர் மீனவர். டாரே மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு, கடந்த 28ம் தேதி முதல் தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். மீன்பிடிக்க சென்றவருக்கு முதல் நாளிலேயே காத்திருந்தது பேரதிர்ஷ்டம். ஆம், அவர் வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின. இதைக் கவனித்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்துள்ளார்.
அப்போது வலையில் சுமார் 150 மீன்கள் இருந்தன. அவருடன் சென்றவர்கள் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்களாகும். ஆம், கோல் மீன் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களை கொண்ட மீனாகும். இது பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கதாகும்.
இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும். டாரே இந்த மீன்களுடன் கரை திரும்பியதும் அவை ஏலம் விடப்பட்டதில், சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இதனை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்து சென்றார்கள். கோல் மீன்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது.
இதன் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ். இந்தோனேசியா தாய்லாந்து ஹாங்காங் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இதற்கு எக்கச்சக்க டிமெண்ட் இந்த மீனுக்குள் இருக்கிறது. மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த மீன் தங்க மீன் என்று வர்ணிக்கப்படுகிறது.