உலகிலேயே சிறந்த ஹோட்டல்கள் பட்டியல் - இந்திய உணவகங்களும் இருக்கு..
உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
தலைசிறந்த உணவகங்கள்
2024ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த உணவகங்கள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 1 முதல் 50 வரையிலான சிறந்த உணவகங்களின் பட்டியலை ஜூன் 5ஆம் தேதி, லாஸ் வேகாஸில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் நேரடியாக அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக 51-100 வரையிலான சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை-டெல்லி
இதில், மும்பை மற்றும் டெல்லியில் இருக்கும் இரண்டு உணவகங்கள் இடம்பிடித்துள்ளன. மாஸ்க் (Masque) உணவகம் 78ஆவது இடத்திலும், டெல்லியில் உள்ள இந்தியன் ஆக்சென்ட் உணவகம் 89ஆவது இடத்திலும் உள்ளது.
மாஸ்க் உணவகத்தை அதிதி துகர் என்பவரும், தலைமை சமையல் கலைஞரான வருண் டோட்லானியும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். உள்ளூர் பொருட்களில் இருந்து அதிகபட்ச சுவையான உணவுகளை தயாரித்து வருவதாகவும், இந்தியாவின் மிகவும் முன்னோக்கி சிந்திக்கும் உணவகம் என்றும் பாராட்டப்பட்டுள்ளது.
இந்தியன் ஆக்சென்ட் உணவகம், 2015 முதல் 2021 வரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த உணவகமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.