உலகின் டாப் 50 ஹோட்டல்கள்; இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய ஹோட்டல் - எது தெரியுமா?
உலகின் சிறந்த 50 ஹோட்டல் மற்றும் பார்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Top 50
உலகின் 50 சிறந்த உணவகங்கள் மற்றும் பார்களின் நிறுவனர்கள் முதல் முறையாக உலகின் சிறந்த 50 ஹோட்டல் மற்றும் பார்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் முதல் இடம் இத்தாலியில் உள்ள லேக் கோமோ அருகில் உள்ள பாசலாக்வா.
புகழ்பெற்ற விருந்தினர்களுக்கு விருந்தளித்து வந்த 18 ஆம் நூற்றாண்டின் கட்டிடம் இது. பல ஆண்டுகளாக மீட்டெடுத்த பிறகு, 24 அறைகள் கொண்ட இந்த சிறிய ஹோட்டல் ஜூன் 2022 இல் திறக்கப்பட்டது.
ஒபராய் அமர்விலாஸ்
தொடர்ந்து ஆசிய ஹோட்டல்களான ரோஸ்வுட் ஹாங்காங், போர் சீசன் சாவ் பிரயா நதி, பாங்காக், அப்பர் ஹவுஸ், ஹாங்காங்; அமன் டோக்கியோ போன்றவை டாப் 5 இடங்களை பெற்றுள்ளன.
50 இடங்களில் 21 இடங்களை ஐரோப்பிய ஹோட்டல்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த பட்டியலில் ஆக்ராவில் உள்ள ஒபராய் அமர்விலாஸ், 45 ஆவது இடத்தில் உள்ளது. இந்த சிறந்த சொகுசு ஹோட்டல், தாஜ்மஹாலில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் ஒவ்வொரு அறை மற்றும் தொகுப்பிலிருந்தும் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் அழகிய காட்சியை பார்த்து ரசிக்க முடியும்.
50 பெஸ்ட் ஹோட்டல்கள் தரவரிசைகளைத் தொகுக்கும் செயல்முறையானது, அகாடமி சேர்ஸ் எனப்படும் பிராந்தியப் பிரிவுத் தலைவர்களால் ஒதுக்கப்பட்ட 580 ஜூரிகளின் அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.