50 உணவு ஸ்டால்கள்; 100 வகை மெனு - பிரபல பாலிவுட் நடிகையின் திருமண கோலாகலம்
நடிகை கியரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா திருமண ஏற்பாடு பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
கியரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா
பாலிவுட் நடிகை கியாரா, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் காதலித்து வந்தனர். அவர்களின் திருமணத்தை ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இத்திருமணம் நேற்று நடப்பதாக இருந்தது. தற்போது இன்று இத்திருமணம் நடைபெறுகிறது. திருமணம் நடக்கும் ஹோட்டலில் 50க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இத்தாலியன், சைனீஸ், அமெரிக்கா, தென்னிந்தியா, மெக்சிக்கோ, ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமண ஏற்பாடு
மொத்தம் 10 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான உணவு வகைகள் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தினர்களை கவனிக்க 500 வெயிட்டர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட்டிலிருந்து கரண் ஜோகர், சோனாக்ஷி சின்ஹா, தயாரிப்பாளர் ஆர்த்தி ஷெட்டி, பூஜா ஷெட்டி, சாஹித் கபூர், அவரது மனைவி மீரா, நடிகை ஜூஹி சாவ்லா உட்பட பலர் வந்து கலந்துக்கொள்ள உள்ளனர்.

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
