7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 70 வயது முதியவருக்கு மரண தண்டனை!
போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்கு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள டில்ஜலா பகுதியில் 7 வயது சிறுமி கடந்தாண்டு மார்ச் 26-ல் திடீரென மாயமானார்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுமியைத் தேடிவந்த நிலையில் பக்கத்து வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து சிறுமிக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் பக்கத்து வீட்டில் குடியிருந்த 70 வயது முதியவர் இந்த கொடூரச் செயலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அலிப்போர் நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதிப்தோ பட்டாச்சார்யா, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காகக் கருதி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தார்.
மரண தண்டனை
மேலும், மேற்கு வங்க அரசு பாதிக்கப்பட்ட சிறுமியின் அம்மாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்கவும் உத்தரவிட்டுத் தீர்ப்பு வழங்கினார். அதே போல் அருணாச்சல பிரதேசம் ஷி-யோமி மாவட்டத்தில் யம்கென் பக்ரா என்பவர் சிறார்கள் தங்கிப்படிக்கும் பள்ளியை நடத்தி வந்துள்ளார்.
இந்த பள்ளியில், 15 சிறுமிகள் உட்பட 21 பேருக்கு யம்கென் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்ததது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு யுப்பியா நீதிமன்றம் விசாரித்து
இந்த நிலையில்யம்கென் பக்ராவுக்கு மரண தண்டனையும், அவருக்கு உதவியாக இருந்த இருவருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது உத்தரவிட்டுள்ளது.