பெண்கள் மீதும் போக்சோ சட்டம் போடலாம் - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
போக்சோ வழக்கு பெண்கள் மீதும் பதிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.
போக்சோ சட்டம்
இந்தியாவில் பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பெண் ஒருவர் தனது மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறத்தல்களில் ஈடுபடும் பட்சத்தில் பாலின பாகுபாடின்றி பெண்கள் மீதும் இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் போக்சோ. இதில் சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் மீது பாலின பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த சட்டத்தின் மூன்றாவது பிரிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் "நபர்" என்ற வார்த்தை ஆணை மட்டும் தான் குறிக்கும் என்று ஏன் புரிந்து கொள்ளப்படுகிறது? போக்சோ சட்டத்தின் மூன்று மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டு இருப்பவை கொண்டு குழந்தைகளுக்கு
நீதிமன்றம்
எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவது பாலின வேறுபாடு இன்றி குற்றம் என்பதையே குறிக்கிறது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்சோ சட்டம் இயற்றப்பட்டது
என்பதை கவனத்தில் கொண்டு ஒரு குழந்தை மீது ஆண் அல்லது பெண் குற்றம் செய்தாலும் நீதிமன்றம் சட்டமியற்றும் நோக்கத்தையும், சட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் எந்த விதியையும் விலக்கக்கூடாது. இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பாலியல் துன்புறுத்தல்,
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வகையில் ஏதேனும் பொருள் அல்லது உடல் உறுப்பை உள்நுழைத்தல் ஆகியவற்றை குறிக்கிறது. அந்த வகையில், இது ஆணுறுப்பை மட்டுமே குறிக்கும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது என தெரிவித்தார்.