சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்தாலும்...வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

Chennai Madras High Court
By Swetha May 13, 2024 08:51 AM GMT
Report

போக்சோ வழக்கில் சென்னை உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமியின் விருப்பம்

சென்னையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இவர் கடந்த 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமியை திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பிறகு இருவரும் ஒகேனக்கல் சென்று சில நாட்கள் தனிமையில் இருந்துள்ளனர்.

சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்தாலும்...வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு! | 10 Years In Jail For Teenager Relationship

சிறுமி காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். சென்னை திரும்பிய அந்த சிறுமி பெற்றோருடன் அந்த சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார். காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை போக்சோ உச்சநீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சதீஷ்குமார் மேல்முறையீடு செய்தார். மீண்டும் விசாரணையில், 'மனுதாரரும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

சிறுமியை கர்ப்பமாக்கிய டிக் டாக் பிரபலம் போக்சோ சட்டத்தில் கைது!

சிறுமியை கர்ப்பமாக்கிய டிக் டாக் பிரபலம் போக்சோ சட்டத்தில் கைது!

உச்சநீதிமன்றம்

சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் மனுதாரர் சிறுமியுடன் உறவு வைத்துள்ளார். எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என வாதாடினார். இதற்கு நீதிபதிகள், 'பாதிக்கப்பட்ட சிறுமி மைனர். அவர் விருப்பத்தின் பேரில்தான் மனுதாரர் உறவு கொண்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்தாலும்...வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு! | 10 Years In Jail For Teenager Relationship

தற்போது அந்த சிறுமிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துள்ளது. மனுதாரர் சிறுமியிடம் நடந்து கொண்டது எப்போதும் அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். மனுதாரர் கடுமையான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். மனுதாரருக்கு 25 வயது ஆகிறது.

சிறுமியுடன் உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் அறியாமல் இருக்க முடியாது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது' என தீர்ப்பு கூறினார்.