சிறுமியை கர்ப்பமாக்கிய டிக் டாக் பிரபலம் போக்சோ சட்டத்தில் கைது!
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக் டாக் பிரபலம் போக்சோ சட்டத்தில் கைதானார்.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கொத்தவலச கிராமத்தை சேர்ந்தவர் பார்க்கவ்.ப்ன் இவர், ப்க்கெட் பார்கவ் என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி ஏராளமான டிக்டாக் வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசபட்டவர்.
இந்த நிலையில் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் இருவரும்இரண்டு பேரும் அண்ணன் தங்கை உறவு முறை என கூறி வந்தனர்.
அந்த சிறுமியுடன் இணைந்து பார்கவ் பல்வேறு வீடியோக்களை டிக் டாக்கில் பதிவு செய்தார். இந்த நிலையில் அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து அவரை பரிசோதனைக்காக மருத்துவரிடம் பெற்றோர் அழைத்து சென்றனர்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவமனை நிர்வாகம் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து பெற்றோர் அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை பார்கவ் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததே கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.
இதுபற்றி சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐதராபாத் சென்று பார்கவ்வை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.