வெடிக்கும் வன்முறை; பல மாவட்டங்களில் ஊரடங்கு - விரையும் துணை ராணுவம்!
அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வன்முறை தீவிரம்
மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி மக்கள் இடையான வன்முறை தீவிரமாகியிருக்கிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் மேற்கு இம்பாலில் ட்ரோன் மூலம் குண்டுகள் போடப்பட்டு நடந்த தாக்குதலில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதனால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு
இதற்கிடையில், மணிப்பூரில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த தெலுங்கானா, ஜார்கண்டில் இருந்து 2000 சிஆர்பிஎப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், ட்ரோன்கள், ஆளில்லா வான்வெளி இயந்திரங்களை செயல்படவிடாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளும் அனுப்பப்படவுள்ளது.