பொதுவெளியில் பாலியல் வன்கொடுமை - வேடிக்கை பார்த்த மக்கள்!
நடைபாதையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்தியப் பிரதேசத்தின் பிரபல ஆன்மிக நகரம் உஜ்ஜைன். இங்கு பரபரப்பான சாலைகளில் ஒன்று கொய்லா பாதக். அங்கு பெண் ஒருவர் பட்டப் பகலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
அதனை சுற்றி நின்று பலரும் வேடிக்கை பார்த்துள்ளனர். யாரும் இந்த குற்றத்தை தடுக்கவில்லை. மேலும், அதனை வீடியோவாக எடுத்துள்ளர். அது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
இதுகுறித்து உஜ்ஜைன் நகர காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில், “ஒரு பெண் காவல் நிலையத்திற்கு வந்து தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். உடனடியாக ஒரு பெண் அதிகாரி வரவழைக்கப்பட்டு, அவரின் புகாரை கேட்டு மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
லோகேஷ் என்கிற ஒரு நபரை அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்தில் லோகேஷைக் கைது செய்தோம். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவரை மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.