Monday, Jul 7, 2025

சுற்றுலா சென்ற பேருந்து லாரி மீது மோதி பயங்கர விபத்து - 24 பேர் உடல் நசுங்கி பலி!

Mexico Accident Death
By Sumathi 8 months ago
Report

 பேருந்து-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து விபத்து

மெக்சிகோ, நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு சுற்றுலா பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

Truck Bus Crash

அப்போது ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 13 பேர் உடல் கருகி பலி!

லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 13 பேர் உடல் கருகி பலி!

24 பேர் பலி

இந்த பயங்கர விபத்தில் 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

mexico

தொடர்ந்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.