அழுகிய நிலையில் 189 உடல்கள் - தகன இல்லத்தால் நடுங்கிப்போன மக்கள்!

United States of America
By Sumathi Oct 21, 2023 10:25 AM GMT
Report

தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரிட்டர்ன் டூ நேச்சர்

அமெரிக்கா, கொலராடோவின் பென்ரோஸ் என்ற நகரத்தில் பாழடைந்த கட்டடம் ஒன்று உள்ளது. அங்கு இறந்த உடல்களை தகனம் செய்யும் ரிட்டர்ன் டூ நேச்சர் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2017ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

colorado

ஜான் ஹால்போர்டு என்பவர் மற்றும் அவர் மனைவி கேரி ஹால்போர்டு உரிமையாளராக உள்ளனர். இயற்கையான முறையில் உடல் தகனம் செய்யப்படும் என விளம்பரப்படுத்தி வந்துள்ளனர்.

வேற வழி தெரியல.. 2 குழந்தைகளை கொன்ற தாய் - அழுகிய நிலையில் உடல்கள்!

வேற வழி தெரியல.. 2 குழந்தைகளை கொன்ற தாய் - அழுகிய நிலையில் உடல்கள்!

 அழுகிய உடல்கள் மீட்பு

இந்நிலையில், அந்த கட்டடத்தில் துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் வந்த நிலையில், அங்கு அதிகாரிகள் சோதனையிட்டதில் ஏராளமான அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.

america

தொடர்ந்து, இந்த உடல்களின் அடையாளம் காண சில வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த அமைப்பினர் வரி செலுத்தாமல், சொத்து பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

funeral home

பதிவு காலாவதியாகியும் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் அளித்து வந்துள்ளனர். தற்போது, இதுதொடர்பாக 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சட்ட அமாக்கத்துறையை தொடர்பு கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.