வேற வழி தெரியல.. 2 குழந்தைகளை கொன்ற தாய் - அழுகிய நிலையில் உடல்கள்!
தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, அவர்களது உடலை படுக்கையிலேயே 15 நாட்களாக வைத்துள்ளார் தாய்.
குழந்தைகளை கொன்ற தாய்
பிரேஸ், குராபுவா என்ற பகுதியில் எலியாரா பாஸ் நார்டெஸ்(31) தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தினசரி எலியாரா வேலைக்கு சென்று வந்தாலும் தனது வீட்டை சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால் கடந்த 15 நாட்களாக வீடு சுத்தம் செய்யாமலும், வீட்டில் இருந்து துர்நாற்றமும் வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எலியாரா தனது வழக்கறிஞர் நண்பர் ஒருவருக்கு போன் செய்து தனது 2 குழந்தைகளை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
வளர்க்க கஷ்டம்
அவர் உடனடியாக காவல்துறையினருக்கு நடந்தவற்றை கூறி தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் எலியாரா வசித்து வந்த குடியிருப்பை சோதனை செய்ததில் 2 குழந்தைகளின் சடலங்களை அழுகிய நிலையில் கண்டுள்ளனர்.
இதயடுத்து தாயிடம் நடத்திய விசாரணையில், பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தன் குழந்தைகளுக்கு எதுவும் செய்யமுடியவில்லை. அதனால் மனம் நொந்துப்போன எனக்கு வேறு வழி தெரியாமல் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்தார்.
அழுகிய உடல்கள்
மேலும், தன் இரண்டு குழந்தைகளையும் ஒரே நாளில் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், குழந்தைகளின் சடலங்களை உடற்கூராய்வு செய்ததில் ஒரு குழந்தை 13 ம் தேதியும், மற்றொரு குழந்தை 17 ம் தேதியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அந்த இரண்டு சடலங்களும் குறைந்தது 2 வாரத்திற்கு முன்பு இறந்து இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, எலியாரா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.