சென்னையில் குழந்தை பெற்றெடுத்த மதுரை சிறுமி - தகாத உறவால் கொடூர செயல்!
17 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிறுமி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த தெருவிலிருக்கும் பொதுமக்கள் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை தெருவில் வீசிச்சென்ற தாய் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாய் ஒரு 17 வயது சிறுமி என்பதும் தெரியவந்தது. மதுரையை சேர்ந்த அந்த சிறுமி, அங்கு வாலிபர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.
போக்ஸோ சட்டம்
இந்த விஷயம் வெளியே தெரிந்த அவமானம் என்று அந்த சிறுமியின் கண்பார்வையற்ற பெற்றோர் கருதியுள்ளனர். இதனால் சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளனர்.
அப்போது பிரசவ வலி ஏற்பட்டு சிறுமி ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், அந்த குழந்தையை தெருவில் வீசியுள்ளனர். இந்நிலையில் போலீசார் அந்த சிறுமியையும், குழந்தையையும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், சிறுமியை கர்ப்பமாக்கிய மதுரையைச் சேர்ந்த வாலிபர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.