தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்கனும் - ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெரு நாய்கள்
சென்னை மாநகராட்சியுடன் விலங்குகளின் சொர்க்கம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் அவர் பேசுகையில், தெரு நாய்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தத்தெடுத்து பராமரிக்க வேண்டும். நாய்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கவே இந்த தடுப்பூசி முகாமை தொடங்கியுள்ளோம்.
ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
கால்நடைகளின் சுகாதாரம் முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது போல விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். 2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது சென்னையிலும் டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் சுயமாக மருந்தை உட்கொள்ளாமல் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதில் எம்.கே.மோகன் எம்.எல்.ஏ., வருவாய்த் துறை கமிஷனர் நந்தகுமார், மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.