100 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை - அதிர்ச்சியில் விலங்குகள் ஆர்வலர்கள்
ஒரு கிராமத்தில் 100 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவின் சித்திப்பேட் மாவட்டம் திகுல் கிராமத்தில் மார்ச் 27ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர், கிராம தலைவர் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த கிராமத்தின் தலைவர், நாய் பிடிப்பவர்களை வரவழைத்ததை தொடர்ந்து அவர்கள், தெரு நாய்களை விஷ ஊசி போட்டு பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கவுதம் என்ற விலங்குகள் நல ஆர்வலர், ஐதராபாத்தில் உள்ள விலங்குகள் நல மையத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, மாவட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
இறந்த தெரு நாய்களில் உடல்கள் அப்பகுதியில் உள்ள பழைய கிணற்றில் புதைக்கப்பட்டன என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த 3 மாதங்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, போலீசாரிடம் புகார் கொடுத்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட எஸ்.பி மற்றும் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இரசாயனத் தொழிற்சாலையை பதம் பார்த்த ஈரானிய ஏவுகணை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு IBC Tamil
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan