உடல் பருமனை குறைக்கனும்; டயட்டில் இருக்கும் பூனை - ருசிகர சம்பவம்!
உடல் பருமனை குறைக்க பூனை ஒன்று டயட்டில் இருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
க்ரோஷிக் பூனை
ரஷ்யாவைச் சேர்ந்த பூனை க்ரோஷிக். இது 17 கிலோ எடையை கொண்டுள்ளது. இதனால் நடக்க கூட முடியாத நிலையை எதிர்கொண்டு வருகிறது.
தின்பண்டங்களை விரும்பி உண்பதற்கு பெயர் பெற்றதால் இந்த பூனை சிறுவயதிலேயே உடல் எடை அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால் இந்த பூனை தற்போது டயட்டில் உள்ளது. Matroskin என்ற தங்குமிடத்தில் மறுவாழ்விற்காக அட்மிட் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், க்ரோஷிக்கை அதன் முன்னாள் உரிமையாளர் நன்கு கவனித்துள்ளார். பூனை தொடர்ந்து ரொட்டி, சூப், விஸ்கி மற்றும் இறைச்சி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளது. இதனால் உடல் எடை வெகுவாக அதிகரித்த நிலையில், எழுந்து கூட நடக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது.
உடல் எடை அதிகரிப்பு
நாளடைவில் அதனால் அசைய கூட முடியவில்லை. இதனால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் மேட்ரோஸ்கின் தங்குமிடத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் க்ரோஷிக்கிற்கு அல்ட்ராசவுண்ட் செய்ய அழைத்து சென்றனர். ஆனால் பூனைக்கு ஸ்கேன் செய்ய முடியவில்லை.
[
ஏனெனில் சென்சார் கொழுப்பு அடுக்குகளைக் கடக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பூனையின் உடல் எடை அதிகரித்திருந்தது. ஒவ்வொரு வாரமும் 70-150 கிராம் வரை எடையை குறைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
க்ரோஷிக் வாட்டர் டிரெட்மில்லில் நடந்து செல்லும் வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் இணைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.