16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பிருத்விராஜ் படப்பிடிப்பில் நடந்த கொடூரம்!
பிருத்விராஜ் படப்பிடிப்புத் தளத்தில் 16 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை ஒருவர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மலையான நடிகர்கள்
மலையாளத் திரையுலகில் 'Casting Couch' எனப்படும் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி உள்ளதாக ஹேமா ஆணையம் அறிக்கையில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து மலையான நடிகர்கள்,தயாரிப்பாளர் , இயக்குநர்கள் மீது தொடர்ந்து நடிகைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகின்றனர்.
இது விவகாரம் மலையாளத் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,'' நடிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களைப் பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை முதல்-மந்திரி பினராயி விஜயன் அமைத்து உத்தரவிட்டார்.
பாலியல் தொல்லை
இந்தச் சூழலில் பிருத்விராஜ் படப்பிடிப்புத் தளத்தில் 16 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை ஒருவர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். பிபின் பிரபாகர் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு ஒன் வே டிக்கெட் என்ற படம் வெளியானது .
இதில் நடிகர் பிருத்விராஜ் ,பாமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு போது 16 வயது சிறுமி மற்றும் அவருடைய தாய் இரண்டு பேரும் தங்க வைக்கப்பட்டனர்.
அப்பொழுது கேமிராமேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் படக்குழுவைச் சேர்ந்த பலரும் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தன்னிடம் தெரிவித்து அழுதனர். இந்தச் சம்பவத்தை நடிகை தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில் கூறி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.