9ம் வகுப்பு மாணவி தேர்வறையிலேயே திடீர் மயக்கம் - மாரடைப்பால் மரணம்!
9-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
ராஜ்கோட், ஜஸ்டான் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி(15). இவர் அங்குள்ள ஷாந்தபா கஜேரா பள்ளியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தேர்வையொட்டி அறைக்குள் நுழையும் போது திடீரென சுருண்டு விழுந்துள்ளார்.

உடனே அவர் மயக்கமடைந்ததாக எண்ணி பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்று பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவி மரணம்
தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. அதனையடுத்து, பள்ளி செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்கள் தந்த அழுத்தங்கள் எதுவும்

அவரது உடல்நலத்தை பாதிக்கும் வகையில் இருந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan