நவராத்திரி கொண்டாட்டம்; கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சி சம்பவம்!

Sharada Navratri Gujarat India Death
By Jiyath Oct 22, 2023 03:37 AM GMT
Report

நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடியபோது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கர்பா நடனம்

வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அங்கு நவராத்திரி கொண்டாடப்படும் 9 நாளும் இரவுகளில் கர்பா எனும் நாட்டுப்புற நடனம் ஆடப்படுகிறது. இந்த கர்பா நடனத்தை ஆண்களும், பெண்களும் பாரம்பரிய உடையில் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

நவராத்திரி கொண்டாட்டம்; கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சி சம்பவம்! | 10 Died Heart Attacks While Dancing Garba Navratri

பல வட மாநிலங்களில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும், முக்கியமாக குஜராத் மாநிலத்தில் தான் கர்பா நடனம் புகழ் பெற்றது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவங்க மேயரா.. இல்ல LKG குழந்தையா? மேயர் பிரியாவை கலாய்த்த விஜய் டிவி பிரபலம்!

இவங்க மேயரா.. இல்ல LKG குழந்தையா? மேயர் பிரியாவை கலாய்த்த விஜய் டிவி பிரபலம்!

மாரடைப்பால் மரணம்

மேலும் நவராத்திரி தொடங்கிய முதல் 6 நாட்களில் 609 பேருக்கு கர்பா நடனமாடியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் 6 நாட்களில் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்ஸ்க்கு 521 அழைப்புகள் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

நவராத்திரி கொண்டாட்டம்; கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சி சம்பவம்! | 10 Died Heart Attacks While Dancing Garba Navratri

எனவே இந்த நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க குஜராத் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.