நவராத்திரி கொண்டாட்டத்தில் புகுந்த கார் - ஒருவர் பலியான பரிதாபம்
சத்தீஸ்கரில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கூட்டத்தின் நடுவே கார் புகுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா பொம்மையை அழிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் எதிர்பாராத விதமாக கூட்டத்தில் வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.
இதில் பலர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 16பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேசமயம் பண்டிகை நாட்களில் சத்தீஸ்கர் அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Scary Visuals From Jashpur Chhattisgarh- A speeding vehicle rams into a group of people , several injured #ACCIDENT pic.twitter.com/5fHfORXRUo
— Utkarsh Singh (@utkarshs88) October 15, 2021