முடிவில்லாத இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. பள்ளி மீது குண்டுவீச்சு - 15 பேர் உயிரிழப்பு!
காசா பள்ளிகள் மீது குண்டுவீசியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தீவிரமான போர் நடந்து வருகிறது. இதனை தடுக்க பல நாடுகள் முயற்சி செய்தும் இந்த போர் ஒரு முடிவில்லாமல் நடந்து வருகிறது. நாற்று காலை அல்-ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர் என்று ஹமாஸ் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
தாக்குதல்
இந்நிலையில், இந்த தாக்குதலில் முன்னதாக 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 54 பேர் காயமுற்றனர் என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
மேலும் ஐ.நா.-வும் எந்த தகவலும் வழங்கவில்லை. காசா எல்லையில் உள்ள நான்கு ஐ.நா. பள்ளிகள் வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்ததாக ஐ.நா.-வின் பாலஸ்தீனர்களுக்கான மீட்பு படை தெரிவித்தது.