சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 128 பேர் பலி - பிரதமர் மோடி உறுதி!
நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
நிலநடுக்கம்
நேபாளம், மேற்குப் பகுதியில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
நிலநடுக்கம் ஜாஜர்கோட் பகுதியில் லாமிடண்டா எனுமிடத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அளவீடு மையம் தெரிவித்துள்ளது. இதில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியை தொடர்ந்து இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்..!
128 பேர் பலி
பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல், நாட்டின் முப்படைகளும் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் நேபாளுடன் இந்தியா உறுதியுடன் நிற்கிறது. இதிலிருந்து நேபாளம் மீண்டு வர அனைத்து உதவிகளையும் இந்தியா செய்ய தயாராக இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.