துருக்கி நிலநடுக்கம் அமெரிக்கா சதியா : செயற்கை நிலநடுக்கம் நடந்துள்ளதா?
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக பல உயிரிழப்பினாலும் பொருளாதார நெருக்கடியாலும் கடும் சிக்கலில் உள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
இந்த நிலையில் துருக்கி நிலநடுக்கம் அமெரிக்காவின் சதியாக இருக்கலாம் என்று சமூகவலைதளங்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ள தகவல்களில் எச்ஏஏஆர்பி என்பது 'ஹை-பிரீக்வென்சி ஆக்டிவ் அரோரல் ரிசர்ச் புரோகிராம்' என்பதைக் குறிக்கிறது. ( அதாவது கடும் நில அதிர்வை பூமிக்கடியில் உருவாகுவது )
அமெரிக்கா காரணம்
இந்த அமெரிக்க ஆராய்ச்சி 1990களில் இருந்து செயல்பட்டு வருகிறது. இத விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகம் அலாஸ்காவின் ககோனாவுக்கு அருகில் அமைந்துள்ளது. இப்போது அலாஸ்கா பேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தால் இயக்கப்படுகிறது.
ரேடியோ கம்யூனிகேஷன் டெக்னாலஜியில் கவனம் செலுத்துவதே இதன் நோக்கம். இந்த புகழ்பெற்ற தொழில்நுட்பத்தை அமெரிக்க போர்க்கப்பல் செயல்படுத்தியதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.ஆனாலும் இந்த தகவலை புவியல் வல்லுநர்கள் மறுத்து வருகின்றனர்.
செயற்கை நிலநடுக்கம்
அதே சமயம் செயற்கையாக நிலநடுக்கத்தை உருவாக முடியுமா என்ற கேள்வி நமக்கு எழலாம் தென் கொரியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 15 ம் தேதி 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் 500 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர் 67 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகின்றது. அப்போது இந்த நில நடுக்கத்தை குறித்து ஆராய்ச்சி செய்த மார்க்கஸ் ஹாரிங் என்பவர் செயற்கையாக நில நடுக்கத்தை உருவாக்கியதாக கருத்து தெரிவித்தார்.
தென்கொரியா
தென்கொரியாவின் போஹாங் பகுதியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் அப்பகுதியில் நடத்தப்பட்ட ஜியோதெர்மல் எனப்படும் புவி வெப்ப சோதனைகளின் தொடர்ச்சி என குற்றம் சாட்டினார்.
இதே போல் அமெரிக்க கடற்படை கடந்த 2021 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெரும் கடலில் அணு ஆயுத சோதனையினை நடத்தியது நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஜெரால்டு ஆர் போர்ட் என்ற போர்க்கப்பலை அட்லாண்டிக் கடலில் பரிசோதனை செய்துள்ளனர்.
இதற்கு 18,144 கிலோ கிராம் வெடிமருந்தை வெடித்து சோதனை செய்துள்ளனர்.
கடற்படை சோதனை
அப்போது சோதனையின் போது கடல் நீர் பெரிய அளவில் மேலெழும்பியுள்ளது. இந்த வெடிமருந்தால் பயங்கர அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு செயற்கை நிலநடுக்கம் என கூறப்பட்டது அதே சமயம் துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதினானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
செயற்க்கையான நிலநடுக்கத்தால் இவ்வுளவு அதிகமான அதிர்வை ஏற்படுத்த முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் அறிவியல் கோட்பாடுகளும், உருவாக்கமும் வெறும் கண்டுபிடிப்பு என்ற நிறைவோடு முடிந்துவிடுவதில்லை.
வரலாற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது; நியதிகளை உடைத்தெறிகிறது; சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது அறிவியல் தொழில் நுட்பம் பல நேரங்களில் அழிவை ஏற்படுத்தியுள்ளது அதனை மறுப்பதற்கில்லை ஆனால் துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இயறகியானதே இதற்கும் அமெரிக்காவுக்கும் சம்மந்தம் இல்லை எனக் கூறினாலும் அமெரிக்கா எப்போதும் பள பளப்புடன் இருப்பதற்கு அதன் நட்பு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொண்டதும் மிக முக்கிய காரணம்.
அதே வேளையில் அமெரிக்காவை எதிர்க்கும் எந்த ஒரு தேசமும், அதன் மன்னரையும், மண்ணையும் மக்களையும் நேசிக்கும் எந்த ஒரு புனிதரையும் கூட வாலை ஒட்ட நறுக்கி விட்டுத்தான் வேறு வேலை பார்க்கும். இது அமெரிக்காவின் இன்னொரு முகம் என்பதை மறுக்க முடியாது.