சிவகங்கையில் இன்று முதல் 144 தடை; ஆட்சியர் உத்தரவு - என்ன காரணம்!

Tamil nadu Curfew Sivagangai
By Sumathi Oct 23, 2024 01:30 PM GMT
Report

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மருது சகோதரர்கள் 

நாளை(அக்.24) மாமன்னர்கள் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் 223 வது நினைவு தினம் அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

மருது சகோதரர்கள்

தொடர்ந்து, 27 ஆம் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

வேலுநாச்சியார் ஆண்ட சிவகங்கை சீமை - வீரமும் வரலாறும்!

வேலுநாச்சியார் ஆண்ட சிவகங்கை சீமை - வீரமும் வரலாறும்!


144 தடை உத்தரவு

இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுகிறது.

ஆட்சியர் ஆஷா அஜித்

இதன் காரணமாக இந்த விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் 31 ஆம் தேதி வரை 163(144) தடை உத்தரவை காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் பரிந்துரையின்பேரில் ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.