காலத்தால் அழியாத சுவடு - டுவிட்டரில் டிரெண்டாகும் ‘1801 ஜம்புத்தீவு பிரகடனம்’

tamilnadu-samugam
By Nandhini Jun 16, 2021 12:26 PM GMT
Report

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 1801ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி , ‘உடம்பில் ஆங்கிலேய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்’எனும் அறைகூவலாய் ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் மாமன்னர் சின்னமருது பாண்டியரால், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சுவர் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் எழுத்துப்பூர்வமாக வெளியிடப்பட்ட எழுச்சிமிக்க பிரகடனமே இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் பிரகடனம்.

இதைத்தான் ‘ஜம்பு தீவு பிரகடனம்’என்று அழைக்கப்பட்டு வருகிறது. சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னர்களான மருது சகோதரர்களில் இளையவர் சின்ன மருது. இவர் 1801ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்.

விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னுதாரணமாக மருது சகோதரர்கள் திகழ்ந்தார்கள். 1847ம் ஆண்டு நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான சிப்பாய் கலகத்திற்கு அரை நூற்றாண்டுகளுக்கும் முன்னரே மருது சகோதரர்களால் வெளியிடப்பட்ட ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ தான் ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்தது என்று வரலாறு என்று சொல்லப்படுகிறது.

மருது சகோதரர்களின் இந்தப் போர்ப் பிரகடனம் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் எதிர்ப்பாக இருந்ததால் மருது சகோதரர்களை அழிக்க நினைத்தனர் ஆங்கிலேயர்கள். இதற்கு நாள் பார்த்துக்கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், தங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாக மருது சகோதர்கள் மீதுகுற்றம் சொல்லி, அவர்கள் மீது போர் தொடுத்தனர்.

150 நாட்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்றது. வேறு வழி இல்லாமல், மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் அவர்களால் கட்டப்பட்ட காளையார் கோவிலை இடித்துவிடுவதாக ஆங்கிலேயர்கள் மிரட்டினர்.

காளையார் கோவிலை இடிப்பதற்கு தயாராக பீரங்கியையும் நிறுத்தினார்கள். கோவிலை காப்பதற்காக உயிரை பற்றி கவலைப்படாமல், மருது சகோதர்கள் சரண் அடைந்தார்கள். 24.10.1801ம் ஆண்டு மருது சகோதர்கள், அவர்களின் வாரிசுகள், குடும்பத்தினர் என்று 500க்கும் மேற்பட்டோரை திருப்பத்தூர் கோட்டை முன்பு ஆங்தூக்கிலிட்டனர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மருது சகோதர்களல் நாட்டிலேயே முதல் முறையாக போர் பிரகடனம் வெளியிட்டு 220 ஆண்டுகள் ஆகிவிட்டன. மருது சகோதர்களின் வீரத்தை நினைவுகூர்த்து, #1801_ஜம்புத்தீவுபிரகடனம் என்ற ஹேஷ்டேக்கினை ட்விட்டரில் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.