வேலுநாச்சியார் ஆண்ட சிவகங்கை சீமை - வீரமும் வரலாறும்!
சிவகங்கை, மதுரை நாயக்கர் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், இராமநாதபுரம் சேதுபதியின் ஒரு பகுதியாக இருந்தது.
சிவகங்கை
இராமநாதபுரம் சேதுபதி, கிழவன் சேதுபதி என்பவர் இருக்கும் வரையில், சிவகங்கை என்பது தனியாக ஏற்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகு ஏகப்பட்ட வாரிசுரிமை போட்டிகள் ஏற்பட்டன. அதனால் சிவகங்கை, இராமநாதபுரத்திலிருந்து தனி சீமையாக பிரிய ஆரம்பித்தது. இராமநாதபுரம் சேதுபதியாக முத்து விஜய ரகுநாத சேதுபதி', கிபி 1710 லிருந்து 1728 வரை ஆட்சி செய்தார்.
இவருடைய காலத்தில்தான் சிவகங்கை சீமை தோன்றியது. இவர் தன்னுடைய ஆட்சியின்போது இராமநாதபுரம் சேது நாட்டை 8 வருவாய் பகுதிகளாகவும், 72 இராணுவ பிரிவுகளாகவும் பிரித்தார். பிறகு அவைகளுக்கு நாட்டுத் தலைவர்களையும், பாளையக்காரர்களையும், ஊரக பணியாளர்களையும் நியமித்தார். அப்போது சேதுபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது.
வரலாறு
பவானி சங்கரதேவர் என்பவர் முத்து விஜயரகுநாத சேதுபதி படம் சூடியது எதிர்த்து கலகம் செய்தார். ஆகவே, இராமநாதபுரம் சேதுபதி இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில், மானாமதுரை, திருபுவனம், படைமாத்தூர், பாகனேரி சக்கந்தி, திருப்பத்தூர், காளையார்கோவில், நாலுகோட்டை, மல்லாக்கோட்டை என்பவைகள் சிவகங்கை சீமையாக அகற்றப்பட்டது. 1789ல், வேலு நாச்சியார் தாக்கப்பட்டார்.
மருது சகோதரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். மருது சகோதரர்கள் 5 மாதத்திற்கு பிறகு, மீண்டும் திருப்பத்தூர் கோட்டையை கைப்பற்றினர். பிரிட்டிஷ்காரர்கள், ராணி வேலு நாச்சியாரை பதவியிலிருந்து (கிபி 1789 டிசம்பரில்) இறக்கினர். ராணி வேலு நாச்சியாருக்கு பதிலாக கிபி 1790ல் சக்கரவர்த்தி வேங்கன் பெரிய உடையத் தேவர், சிவகங்கை மன்னரானார்.
தனி மாவட்டம்
ஆனால் மருது சகோதரர்களே உண்மையில் ஆண்டனர். கிபி. 1801ல் மருது படைகள் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து தோல்வி அடைந்தனர். மருது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு. கிபி 24-10-1801 அன்று காலையில் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர். இதற்குப் பிறகு சிவகங்கையில் மன்னராட்சி முறை ஒழிந்தது. அதன்பின், ஜமீன்தார் கௌரி வல்லப ஒய்யா தேவர் சிவகங்கை ஜமீன் ஆனார்.
தொடர்ந்து, 1990 ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் “மாவட்டகெஜட்” மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஜமீன் பகுதி மற்றும் ராமநாதபுரம் ஜமீனின் ஒரு பகுதியை இணைத்து உருவாக்கப்பட்டது.
பொருளாதாரம்
கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கும்மி போன்ற நாட்டுப்புற நடனங்களுக்கும், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடன வடிவங்களுக்கும் இந்த மாவட்டம் பெயர் பெற்றது. திறமையான கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் டெரகோட்டா மற்றும் மட்பாண்ட வேலைகள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கும் இந்த மாவட்டம் அறியப்படுகிறது.
நெல், கரும்பு மற்றும் தென்னை ஆகியவை இப்பகுதியில் விளைகின்றன. இந்த மாவட்டம் மாம்பழம், வாழை மற்றும் கொய்யா போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும் பெயர் பெற்றது. இந்த மாவட்டம் மதுரை விமான நிலையம் மற்றும் துறைமுகத்திற்கு அருகாமையில் இருப்பதால், வணிகம் மற்றும் வணிகத்திற்கான முக்கிய மையமாக விளங்குகிறது.
சுற்றுலா
கண்ணத்தாள் கோவில், காளையார் கோவில், காளீஸ்வரர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருகோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோவில் மற்றும் குன்றக்குடி முருகன் கோவில் ஆகியன இம்மாவட்டத்திலுள்ள முக்கியமான கோவில்களாகும். இங்குள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான தொழில்கள் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.