பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி திடீர் நிறுத்தம் - என்ன காரணம்?
பதஞ்சலியின் 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பதஞ்சலி
பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தின் தலைமையகம் செயல்படும் உத்தரகண்ட் மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த உத்தரகண்ட் அரசு, பதஞ்சலி நிறுவனத்திற்கு, 14 பொருட்களை தயாரிப்பதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.
தயாரிப்பு நிறுத்தம்
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலி தரப்பில், உத்தரகண்ட் அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. நாடு முழுதும் உள்ள, 5,606 விற்பனை நிலையங்களில் இருந்து அந்தப் பொருட்களை விலக்கி கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், இந்த, 14 பொருட்கள் தொடர்பான விளம்பரங்களும் நீக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தடை விதித்துள்ள பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்கள் ஸ்வசாரி கோல்டு, ஸ்வசாரி வாட்டி, பிரோன்சோம், ஸ்வசாரி பிரவாஹி, ஸ்வசாரி அவாலே,
முக்தா வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிபிடாம், பிபிகிரித், மதுகிரித், மதுனாஷினி வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிவாம்ரித் அட்வான்ஸ், லிவோகிரித், ஐகிரித் கோல்டு, பதஞ்சலி திருஷ்டி ஐ டிராப்