பதஞ்சலி பொருள் விளம்பரம் போல மன்னிப்பு பெரிதாக இருக்க வேண்டும்- நீதிமன்றம் கடும் காட்டம்!
மன்னிப்பு விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பதஞ்சலி
பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,பாபா ராம்தேவுக்கும் ஏற்கெனவே பல முறை வார்னிங் கொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். முன்னதாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராமதேவ் கோரிய மண்ணிப்பு திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மன்னிப்பு விளம்பரம்
அதன்படி, நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயார் என்றனர்.அதற்கு மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசரணையில், நேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் பொது மன்னிப்புக் கோரினார். இந்த நிலையில், மீண்டும் இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்போது நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அதை பார்த்த நீதிபதிகள் மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்றும் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா? என்று கேள்வி கேட்டனர்.
பொருளை விளம்பரப்படுத்துவது போல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் வழக்கு ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.