பெற்றோர் மொபைலை ஹாக் செய்து மிரட்டிய 13 வயது மகன்.. அதிர்ச்சி சம்பவம்?
ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவிட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கேமிங்
ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையானவர் தனது பெற்றோரின் மொபைல் போன்களையும் ஹேக் செய்து, சாதனங்களில் இருந்து முழுத் தரவையும் அழித்துவிட்டார்.
அது மட்டும் இல்லை, அவர் தனது பெற்றோரை சமூக ஊடகங்கள் வழியாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு, இது தங்கள் மகனின் செயல் என தெரியவில்லை.
ஆபாச உள்ளடக்கம்
யாரோ மூன்றாம் நபர் தான் ஹேக்கிங் செய்து மிரட்டுக்கிறார் என நினைத்து இது குறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய பின் தங்கள் மகன் தான் இதற்கு காரணம் எனத் தெரியவந்தது.
தங்கள் தொலைபேசியின் திரைகளில் அவ்வப்போது விசித்திரமான அனிமேஷன்கள் தோறுவதாக, பெற்றோர்கள் சைபர் செல்லிடம் தெரிவித்தனர். ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனரட்டின் சைபர் நிபுணர் முகேஷ் சவுத்ரி இது குறித்து கூறுகையில்,
காவல் துறை
பெற்றோர்கள் தங்கள் வீட்டின் சுவர்களில் சிப்ஸ் மற்றும் புளூடூத் இயர்போன்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்த நிலையில், இந்த சாதனங்களை வேறு யாரோ தங்கள் குடும்பத்தை கணக்கணிக்க செய்துள்ளனர் என அவர்கள் நினைத்தனர்.
எனினும் விசாரணையில் அனைத்து வினோத சம்பவங்களுக்கும் அவர்களின் மகன் தான் காரணம் என சைபர் செல் துறை கண்டறிந்துள்ளது. சிறுவனின் மாமாவுக்கு சொந்தமான ஸ்மார்ட்போனில் இருந்து ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
சிறுவன் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். இது குறித்து பெற்றோர்கள் காவல் துறையிடம் கூறியபோது, குடும்ப உறுப்பினர்களிடம் தங்கள் மகனின் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு
நாங்கள் கேட்டுக் கொண்டோம் என்று கூறியதாக காவல் துறை அதிகாரி கூறினார். சிறுவனை கடுமையாக விசாரித்தபோது, ஒரு ஹேக்கரின் உத்தரவின் பேரில் இதைச் செய்ததாக கூறினார்.
ஆனால் பின்னர் தானே எல்லாவற்றையும் செய்தேன் என்பதை ஒப்புக் கொண்டார் என காவல் துறை அதிகாரி தெரிவித்தார். எனினும் போலீசார் இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
டம்மி குடியரசு தலைவர்.. நக்கலடித்த காங்கிரஸ்? நிறுத்துங்க.. மத்திய அமைச்சர் பதிலடி!