யூ-டியூபர் மதன் கௌரியை ஒருமையில் திட்டிய நடிகை காஜல் - ரசிகர்கள் ஷாக்

Indian National Congress
By Swetha Subash Apr 24, 2022 11:30 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

தனது யூ டியூப் பக்கத்தில் பல சுவாரஸ்யமான தகவல்களை மக்களிடம் பகிர்ந்துகொண்டு வருவதன் மூலம் மிகவும் பிரபலமானவர் யூ-டியூபர் மதன் கௌரி.

தனது யூ-டியூப் சேனலுக்கு பல லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கும் இவர் சமீப காலமாக சுவாரஸ்யமான நிகழ்வுகளை தாண்டி நாட்டு நடப்புகள், உலக நிலவரங்கள், இந்தியாவின் அரசியல் சூழல், விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

யூ-டியூபர் மதன் கௌரியை ஒருமையில் திட்டிய நடிகை காஜல் - ரசிகர்கள் ஷாக் | Kajal Pasupathi Reacts To Madan Gowri Statement

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மதன்கௌரி அண்மையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்தியாவிற்கு ஒரு பலமான எதிர்க்கட்சித் தலைவர் தேவைப்படுகிறது என்று பதிவிட்டிருந்தார்.

யூ-டியூபர் மதன் கௌரியை ஒருமையில் திட்டிய நடிகை காஜல் - ரசிகர்கள் ஷாக் | Kajal Pasupathi Reacts To Madan Gowri Statement

அவரின் இந்த கருத்திற்கு கலவையான கருத்துக்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில், தமிழ் பிக்பாஸ்-இல் நடித்ததன் மூலம் பலரால் அறியப்பட்ட நடிகை காஜல் பசுபதி, மதன் கௌரியின் இந்த பதிவுக்கு “நீ மூடு” என்று ஒருமையில் பதிலளித்திருந்தார்.

சமூக பிரச்சினைகள் குறித்து பதிவிட்டு வரும் காஜல் பா.ஜ.க.வினரை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருபவர் ஆவார்.

இந்நிலையில் அவரின் இந்த பதில் பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் செவிலியராக நடித்ததன் மூலன் நடிகையாக அறிமுகமான காஜல் பசுபதி சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்புகுதிரை, கலகலப்பு 2 போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.